வாழ்க்கை !!!
வலியவனுக்கு எளிமையாகவும்,
எளிமயனவனுக்கு வலிமையாகவும் தோன்றும் ஓர் அதிசயம்!
ஜனனம் என்ற கரையில் தொடங்கி,
மரணம் என்ற மறு கரையை கடக்க,
விதி என்ற நதியை கடந்தே ஆக வேண்டும் .
நான் பிறக்கும்போது அழவில்லை போலும்,
வாழ்க்கை பயணத்தில் அழுகைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!
மிருகங்களோடு பேசதேரிந்த எனக்கு மனிதர்களிடம் பேசதெரியவில்லை.
அதனாலோ என்னவோ எனக்கு நாலுகால் நண்பர்கள் ஏராளம்!
என்னை எட்டி உதைத்த நல்ல இதயங்களின் கால்களை பிடித்து கெஞ்ச தெரிந்ததே தவிர தட்டிவிட மனம் இல்லை!
எல்லோரும் வேண்டும் என்று நினைத்த எனக்கு எல்லாம் வேண்டும் என்றே வந்தது!
நான் நேசித்த இதயம் கூட அக்னி வார்த்தைகளால் என் இதயத்தை சுட்டது,
தேடிச்சென்ற இதயம் கூட தனியே விட்டுவிடு என்று தவிக்கவிட்டது!
எதிலும் வெற்றி இல்லையென்றாலும் எதிலாவது வெற்றி என்று இருந்த எனக்கு எதிலுமே ஏமாற்றம்தான் மிஞ்சியது!
எதிர்நீச்சல் போடும் துணிச்சல் இருந்தும், எதிர்விசையின் சூட்சுமங்களை அறிய மறந்தேன்!
இப்போதுதான் நினைத்து பார்க்கிறேன் என் தந்தை இந்த விதியை நீந்திக்கடந்த வேகத்தை!
பாவம் அவனுக்கு தெரியவில்லை போலும் கொஞ்சம் பொறுத்திருந்தால் என்னையும் கரைசேர்க்க உதவியிருக்கலாம் என்று!
உணர்வுகளில் கோபதிர்க்குகூட என்னைப்பார்த்தால் கோபம் வரும் போல, அந்த கோபம்கூட என்னிடம் வர மறுக்கிறது!
காதலித்து கவிஞன் ஆகலாம் என்றாலும் கவிதை எழுதக்கூட உயிர் எழுத்துக்கள் கிடைக்கவில்லையே! காதல் என்ன அப்படி ஓர் உயிர்க்கொல்லியா? காதலின் முதல் அத்யாயத்தை கூட தண்டாதவன் நான்!
சிரித்து சிரித்து பேசதெரியாது, சிரிக்க வைத்தும் பேசதெரியாது, ஆனால் அழாமல் பார்த்துக்கொள்வேன் என்று அவளிடம் சொன்னேன்!
அவளோ என்னையும் சேர்த்து அழவைத்துவிட்டால்!
எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு குழந்தையாகவே இருந்துவிடலாம் என்றால் கண்ணதாசனின் வரிகள் கண் சிமிட்டியது "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால், வருவோர்க்கு இடம் இல்லை" என்று.
நானும் இந்த நதியை கடந்தாக வேண்டுமே! நம்பிக்கை துடுப்போடு நானும் தொடர்கிறேன் என் பயணத்தை - விதி முடிந்து மரணம் தழுவும் வரை...
-----------------------------------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்பு !!!!!!!
உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட ...
எதிர்பார்த்த நாட்களே அதிகம் ....!!!!!
இன்னும் உன்னை எதிர்பார்க்கிறேன் ...
எதிரில் பார்க்க....!!!!!!
------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------அழகு!--------------------------------
நிலம் அழகு நீர் அழகு
மீன் போன்ற உன் கண் அழகு!
பூ அழகு பொட்டழகு
உன் இதழ் சிந்தும் தேன் அழகு!
உடை அழகு இடை அழகு
நளினமான உன் நடை அழகு!
மண் அழகு விண் அழகு
பௌர்ணமியாய் உன் முகம் அழகு!
பகல் அழகு இரவு அழகு
கார்கூந்தலாய் உன் முடி அழகு!
கை அழகு விரல் அழகு
அதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு!
மயில் அழகு குயில் அழகு
தேன் தெவிட்டும் உன் குரல் அழகு!
சினம் அழகு சிரிப்பழகு
உன் கன்னத்தில் விழும் குழி அழகு!
கவி அழகு மொழி அழகு
நீ பேசும் தமிழ் அழகு!
நெளிவழகு சுளிவழகு
உன் கால்களில் சிலம்பழகு!
நனி அழகு நகை அழகு
பொன்நகையாய் உன் சிரிப்பழகு!
அலை அழகு கடல் அழகு
கடல் போன்ற உன் மனம் அழகு!
தூண் அழகு துரும்பழகு
குறும்பான உன் குணம் அழகு!
இரவு அழகு கனவு அழகு
எனை வாட்டும் உன் நினைவழகு!
மனம் அழகு சினம் அழகு
நீ வசிக்கும் என் உள்ளம் அழகு!
நதி அழகு மதி அழகு
நீ பாடும் ஜதி அழகு!
வான் அழகு மண் அழகு
இறைவன் படைப்பில் பெண் அழகு!
என் அழகு எது அழகு
பெண் இனத்தில் நீ அழகு!
----------------------------------------------------------------------------------------------------------------------------------

செம்மொழி மாநாடு......
கோடி கோடியாய் வாரி இறைத்து
கோலாகலமாய் செம்மொழி மாநாடு!
ஆனால் மாநாட்டின் இலச்சினையிலோ
தேதி ஜூன் 23-27!
தமிழ் அறிஞர்களுக்கும், புரவலர்களுக்கும்
தெரியவில்லையோ என்னவோ தமிழ் மாதங்களைப்
பற்றி!
---------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------ மரபுக்கவிதை !---------------------------------------------
பெண் பார்க்கும் படலத்திலே அவள் ஒரு காட்சிப் பொருளாக!
பரிசம்போடும் வேளையிலே அவள் ஒரு விலை பொருளாக!
கல்யாண மேடையிலே அவள் ஒரு தலையாட்டி பொம்மையாக!
காலங்களும் உருண்டோடியது, நாகரீகமும் மாறியது, ஆனாலும் மாறவில்லை மனிதனின் சில வக்கிர எண்ணங்கள் மட்டும்!
வரதட்சணை ஒரு மரபுப் பிழையாக!
----------------------------------- விதி !-------------------------------------------
விதியே உன்னைக்கண்டு நான் பயந்துவிட்டேன் என்று மட்டும் எண்ணிவிடாதே,
என்னைத் துரத்திவந்த உனக்கு களைப்பாகியிருக்கும், இளைப்பாறிவிட்டு வா காத்திருக்கிறேன்!

----------------------------------------கவிதை-----------------------------------------
காதலிப்பவர்களுக்கு மட்டும்தான் கவிதைகள் சொந்தம் என்றால்,
எனக்கும் கவிதைகள் சொந்தமானவையே!!!!
பெண்ணே உன்னைக் காதலித்ததால் அல்ல,
உன்னால் ஏற்பட்ட தனிமையை காதலித்ததால்!
No comments:
Post a Comment